sun

வியாழன், 16 செப்டம்பர், 2010

அம்மா உனக்காக!!!

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
அம்மா உனக்காக!
----
பிறந்த பின்தான் நீ
என் தந்தையை காதலித்திருப்பாய்
ஆனால் நான் பிறக்கும்முன்னே
நீ என்னை காதலித்தாயே !
----
உன்னை நம்பி வளர்ந்த நான்
மண்ணை நம்பி விழுந்ததும்
தொப்புள் கொடி அறுந்தது
ஆனாலும் நீ
ஊட்டி வளர்க்க மறக்கவில்லையடி!
----
நீ சங்கீதம் பல
கற்றிருந்தாலும்
ஆசைப்பட்டு அதிகமாய்
கேட்டது நான் சொன்ன
அம்மா ....தானே !
----
எனக்காக நீ பாடிய
ஆரரோ ஆரிராரோவிற்கு
எத்தனை ஆஸ்கார்
விருது வேண்டுமானாலும் தரலாம் !
ஆஸ்கர் விருதும் பெருமையடையும் !
----
ஆயிரம் மையில் வேகத்தில்
ஆகாய விமானத்தில்
பறக்கும்போதும் இல்லாத
ஆனந்தம் நீ
என்னோடு போட்ட
அன்ன நடையில்
உணர்ந்தாயடி !
---
நான் சிரிக்கின்றேன் என்பதற்காக
என்னோடு சேர்ந்து சிரித்தாயடி
கை தட்டும் கரடி
பொம்மையை பார்த்து !
----
ஆயிரம் கவிதைகள் நீ
படித்திருந்தாலும் நான்
எழுதிய அ ஆ... இ க்கு தான்
உன் பாராட்டுகள் அதிகம்!
----
மதிப்பெண்கள் குறைந்து
தந்தை முன்
மண்டியிட்டு நிற்கும் போதும்
பொறுமையுடன் தட்டிக்கொடுத்தாயே
நீ பொறியியலாளர் ஆவாய் என்று !
----
விபத்தில் நான் சிந்திய
குருதி ௦A1+ve தெரியவில்லை
ஆனால் நீ அப்போது
சிந்திய கண்ணீர் A1+ve வே
என்று நன்றாக தெரிந்தது !
---
நான் காய்ச்சலில்
வீழ்ந்த போதெல்லாம்
எனக்காக பாதரசம் பொங்கியதைவிட
உன் கண்கள் தானடி அதிகம் பொங்கியது !
---
எத்தனையோ துன்பங்கள்
உன்னை மண்ணுக்குள்
மறைக்க நினைத்தாலும்
எங்கோ சிரித்து விளையாடும்
என் வாழ்க்கைக்காக
அதையெல்லாம் பொறுத்துக்கொண்டாயே!
---
உனக்கு நான்
என்ன செய்வேன் ????
என்று கேட்கமாட்டேன் !
நீ என்னிடம் எதிர்பார்த்து எதிர்பார்த்தும்
கேட்க தயங்கியும் நிற்பது
எனக்கு தெரியும் !
---
என் இதயத்தை
நீ விரும்பியவளுக்கு
அள்ளிதரவேண்டும் அதானே ?
---
நான் விரும்பாவிட்டாலும்
புன்னகையை பூசிக்கொண்டு
ஆவலுடன் வாழ்கிறேன்
அம்மா உனக்காக !!!!!!!

உன் கனவுகளுக்கு
கைகாள் முளைத்த
நாள் முதல் எனக்காகவே
வாழும் அம்மா உனக்காக
இனி நான் வாழ்கிறேன் !
 
                                                ***Sunil sj***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக