sun

வெள்ளி, 26 அக்டோபர், 2012

கிறிஸ்தவம்...!



  

தீண்டதகாதவர்களாய் துரத்தபட்டபோது,
எங்களை தீண்டீயது கிறிஸ்தவம்...!

காலராவால் மடிந்துபோனபோது,
மருந்துகளால் மீட்டது கிறிஸ்தவம்...!

பட்டினியால் உருகுலைந்தபோது,
பண்டங்கள் வழங்கியது கிறிஸ்தவம்...!

கோயிலுக்குள் நுழைய முடியாதபோது,
ஆலயம் கட்டி அழைத்தது கிறிஸ்தவம்...!

மூடர்களாய் இருந்தபோது,
மூதாதையரை படிக்க வைத்தது கிறிஸ்தவம்...!

பிழைக்க தொழில் இல்லாதபோது,
தொழிலோடு பொருள் தந்தது கிறிஸ்தவம்...!

அனாதையாய் அடிமைபட்டபோது,
எங்களை எஜமான்களாக்கியது கிறிஸ்தவம்...!

செல்லா காசாய் இருந்தபோது,
பொற்காசாக்கியது கிறிஸ்தவம்...!

பாதை தவறி பாவத்தில் விழுந்தபோது,
பாதை காட்டி அழைத்தது கிறிஸ்தவம்...!

மதமாற்ற தடையை தகர்த்தெறிந்து,
அன்பே மதமென்று போதித்தது கிறிஸ்தவம்...!

உலக வாழ்வு காட்டியது மட்டுமல்ல,
உன்னத வாழ்வை காட்டியதும் கிறிஸ்தவமே...! 

                                    ***sunil sj*** 

தாத்தாவும் பேத்தியும்




"அ" அம்மா
என்று ஆரம்பித்தார்
தாத்தா!


"இ"வரவும்                                                                                  
முந்திக் கொண்டு
"Elephant " என்றாள்
பேத்தி!


குழம்பிய படியே
"உ" உலகம்
என்று தொடர…,



"எ" வரவும்
தாத்தா இப்ப நானு..,
"A " ஆப்பிள்
என்றாள் பேத்தி!



"ஐ"என்றதும்
முந்திக் கொண்டு
Ice cream என்றாள்!


"ஒ" ஒட்டகம்
என தாத்தாவும்
"O " ஆரஞ்சு
என பேத்தியும் சொல்ல..,


ஒளவையார் யார்?

                    ***sunil sj*** 

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

அமைதி....


காதலை சொன்ன அந்த கணத்தில்,
காதலி காட்டும் அமைதி,
பெண்மையின் ஒரு அழகு..







உயிர் பிடித்து நிறுத்த,
அரை துண்டு ரொட்டியை ,
ஏக்கமாய் பார்க்கும் குழந்தையின் அமைதி,
வறுமையின் ஒரு அவதி..

இறப்பு சேதி கேட்டு,
கண்ணீர் துளி வெளியேறும் முன்,
வெளியேறும் அமைதி,
அதிர்ச்சியின் ஒரு பகுதி..

செடி,கொடி,மரங்களை வீழ்த்தி விட்ட வெற்றியில்,
மழை காட்டும் அமைதி,
வெற்றியின் ஒரு ஆரவாரம்..

மலை மீதிருந்து வீழ்ந்து விட்ட போதிலும்,
அருவி காட்டும் அமைதி,
தோல்வியின் ஒரு கீதம்..

உயிர் கொடுத்து ,உயிர் கொடுத்த தாயின்,
அந்த கண பொழுதின் அமைதி,
தாய்மையின் ஒரு முழு நிறைவு..

கரைந்தோடிய தினங்களில் கரைந்து போன
கல்லூரி மாணவனின் கடைசி தின அமைதி,
நட்பின் ஒரு இரங்கல் கூட்டம்..

துடி துடித்த இதயமும்,
ரத்தம் பாய்ச்சிய நரம்புகளும்
இறந்த பின் காட்டும் அமைதி,
வாழ்வின் ஒரு நிறைவு விழா..

இரவுடன் போர் புரிந்து,
மீண்டும் ஒரு விடியல் தரும்
காலையின் அமைதி,
நம்பிக்கையின் ஒரு முன்னோட்டம்..

வெடிச்சத்ததின் இடையில்
மனைவியின் கடிதத்தைப் படிக்கும்
போர் வீரனின் அமைதி,
பிரிவின் ஒரு பரிதவிப்பு..

தேசிய கீதத்திற்க்கு
எழுந்து நிற்க்கும் 52 நொடிகளின் அமைதி,
இன்றைய அவசர உலகத்தின் ஒரு ஆச்சர்யம்..



         ***sunil sj***

கல்லூரி நட்பு!

   
கல்லூரி நட்பு!
எங்கோ பிறந்தோம்!
எங்கோ பிறந்தோம்!
எங்கோ வளர்ந்தோம்!
அனைவரும் இங்கே!
சந்தித்துக் கொண்டோம்!
இதயத்தை நட்பால
சிந்தித்துக கொண்டோம்!


முகங்களைப் பற்றி
யோசித்ததுமில்லை!
இனம் பணம் பார்த்து
நேசித்ததுமில்லை!

எதிர் பார்ப்புகள்
எதுவுமில்லை!
ஏமாற்றங்கள்
சிறிதுமில்லை!

அவரவர் கருத்துக்களை
இடம் மாற்றிக்க கொள்வோம்!
பாரட்டுக்களை
பரிமாறிக்க கொள்வோம் !

சின்ன‌ சின்ன‌
ச‌ண்டைக‌ள் இடுவோம்
சீக்கிர‌த்திலேயே
ச‌மாதான‌த்திற்கு வ‌ருவோம்!

கவலைகளை
கிள்ளி அறிவோம்!
இலட்சியஙகளை
சொல்லி மகிழ்வோம்!

உழைப்பை பெருக்க
உற்சாகம் தருவோம்!
நலத்தை பெருக்க
நம்பிக்கை தருவோம்!

நன்மைகள் வளர
முயற்சிப்போம்!
நட்பால் உயர்ந்து
சாதிப்போம்! 
 
                                               ***sunil sj***

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

நட்பின் பசுமை


 எங்கோ
எப்போதோ
இப்பூவுலகில்
ஜனித்த‌
இரு ஜீவன்கள்...


எப்படியோ
எங்கெங்கோ
சுற்றிக்களித்த
பள்ளிப்பருவ‌
பாலன்கள்...


முடிந்த நூற்றாண்டின்
முடிவுரை ஆண்டில்...
விடுதலைத் திங்களில்
சுதந்திர தினத்தின்
முந்தைய நாளாம்...
கிழமையும்
திங்களாம்...


காலச் சக்கரத்தின்
சுழற்சியால் அவை
மீண்டும் ஜனித்தன‌
நட்புலகில்...
நட்(டப்)பு நூற்றாண்டின்
முன்னுரையாய்...


இன்று...
அவற்றின் எட்டாம் அகவையோ
'ஆரம்பப் பள்ளி'யாய்...
எனினும்
நட்பெனும் உள் கிடக்கையின்
எண்ணங்களோ
'உயர் நிலை'யாய்...


க‌ழிந்த‌ ஒவ்வோர் ஆண்டும்
'கலைக்க‌ல்லூரி'யின்
புத்தகங்க‌லாய்...
ஒவ்வொரு ப‌க்க‌ங்க‌ளும் (நாட்க‌ளும்)
வாழ்க்கையெனும்
எதுகை மோனை வ‌ரிக‌ளுட‌ன்...
இவைய‌னைத்தும்
அன்பெனும் 'ப‌ல்க‌லைக‌ழ‌க‌த்தால்'
அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌வையாய்...


ஒவ்வொரு நாளும்
தேர்வுகள்...
'கேள்விக‌ளால் ஒரு கேள்வி'யாய்...
விடைக‌ளோ...
மெய் எனும் மையினால் தோய்த்த‌
தூரிகையால் கிறுக்கிட்ட
'கிறுக்க‌ல்க‌ளாய்'
'காகித்ப் பூக்க‌ள்' மிதக்கும்
தெளிந்த 'த‌ண்ணீர் தேச‌த்தில்'...


முடிவுக‌ளோ...
ந‌ம்பிக்கையில்...
'சிக‌ர‌ங்க‌ளை நோக்கி'...
நினைவுக‌ள் ம‌ட்டும்
ம‌ன‌மென்னும் 'இருண்ட‌ வீட்டில்'
ஒவ்வொரு நாழிகையும்
'க‌ள்ளிக்காட்டு இதிகாச‌மாய்'
சற்று 'சுருக்' கென்றும்...
அதுவும் ஓர்
'அழகின் சிரிப்பாய்'...


எங்கோ விதைத்த பதியங்கள்
சினேக சாரலில்...
கிளைத்துக் கொண்டே இருக்கட்டும்...
என்றென்றும்
நட்பின் பசுமையின்
'ஈரத்துடன்'...  
                                             ***sunil sj***

கர்வப்படு; கறுப்பாய் பிறந்ததற்கு...



கறுப்பு...
நிறங்களின் தாய்
மற்றதெல்லாம் சேய்!

வண்ணக்கலவையின்
உச்சமிது
மற்றதெல்லாம் மிச்சமே!

நிறமிகளின் நிறையே
கறுப்பு
குறைபாடே வெண்மை!

இல்லாமையின் நிறம்
கறுப்பு
எல்லாமிருப்பதின் நிறமும்
கறுப்புதான்!

துக்கத்தின் நிறமென்று
யாரிதைச் சொன்னது?
தூக்கத்தின் நிறமென்றால்
அதில் உண்மையிருக்கும்!
தூக்கம் வந்தாலே
கரு'மை" பூசிய இமைகள்
கண்களுக்கு
கருமை போர்த்தும்!

வெண்மேகம்
கருமை சூடினால்
பூமியெங்கும்
பூப்பூக்கும்!

கருவண்டு
சுவைத்திடவும்
மலர்களெல்லாம்
தேன் வடிக்கும்!

கருமை மூடிய
இரவில்தான்
அடுத்த தலைமுறைக்கான
தேடல் நடக்கிறது!
கருவறை தொட்டு
உலகைக் காணும்வரை
கறுப்பின் கதகதப்புதான்
பாதுகாப்பே!

இயற்கையின்
தொலைக்காட்சியில்
பிறை நிலவும்
நட்சத்திரமும்
கருமை தந்த
அலுக்காத
நெடுந்தொடரல்லவா?!

வெண்மையை
ஆதிக்கமாகவும்
கருமையை
அடிமையாகவும்
வரலாறு பேசுகிறது!
இன்றோ
வெண்மையை
ஆதிக்கம் செய்கிறது
கறுப்பு!

கறுப்பாய் பிறந்ததற்கு
வருத்தப்பட்டால்
புன்னகை தொலைத்திருக்கும்
வைரம்!

கர்வப்படு;
கறுப்பாய் பிறந்ததற்கு...
சில நிமிடங்களாவது!



                                                                   ***sunil sj***

சனி, 18 செப்டம்பர், 2010

பிரிவு என்றும் துயரமானதே..!



பத்து மாதத்தில் தாயைப் பிரிந்தபோது
உலகென்னும் தாயைச் சந்தித்தேன்..!
பிரிவு துயரம் தரவில்லை..
என் முதல் அழுகயை தவிர..!

நிலவு காட்டி சோரூட்டி
விடிய விடிய கதை சொல்லி
தாலாட்டி தூங்க வைத்த
பாட்டி இறந்தபோதும்..,
பிரிவு துயரம் தரவில்லை..
துளிர்த்து வந்த கண்ணீரோடு விடைகொடுத்தேன்..!

மூன்று வருடம் உயிராய் கலந்தவள்
கனவுலகில் என்னுடன் வாழ்ந்தவள்
காதல் சொன்ன மறுநிமிடம்
தோழியான போதும்
பிரிவு துயரம் தரவில்லை..
காதலர் மட்டுமே உணரும் தனிமை தவிர்த்து...!

ஆனால்..
நீ யார்..?

என் உடன் பிறந்தவனா..?
என் இருபது ஆண்டுகள் பகிர்ந்தவனா..?
உயிர் கொடுத்தவனா ........

நீ பிரிந்த போது மட்டும்
கண்ணீர் அருவியாய் பொங்கியதே..?
ஏன்..?

நாலாண்டு மட்டுமே உடன் இருந்தாய்..
உடன் சிரித்தாய்.. உடன் அழுதாய்..
வாழ்விர்க்கு அர்த்தம் கூடியதே
நம் நிழல்கள் ஒன்றாய் நடந்தபோது..!

நாம் கொண்ட சண்டைகள்
காதலின் ஊடலில் கூட
கிடைக்குமோ..?
அந்த கசப்பு கூட
நெல்லிக்கணியாய் இனிக்கிறதே..!

மகிழ்வை மட்டுமே மொழியாய்
கொண்ட அந்த நாலு வருடம்..,
புன்னகையை மட்டுமே
பேசித் திரிந்த அந்த நாலு வருடம்..,
கண்ணீரை எதிரியாக்கிக் கொண்ட
அந்த நாலு வருடம்..,

வாழ்வின் மூன்றாம் பிறையான
அந்த நாலு வருடம்..,
அந்த நாலு வருட கல்லூரி வாழ்வு முடிந்த போது
கண்ணீர் மட்டுமே மொழியானதே..!
ஏன்..?
வான் கொண்ட நட்சத்திரம் எல்லாம்
உடைந்து வந்து தலை மேல் இறங்கியதுபோல்
இருந்ததே..
ஏன்..?

நீ என் நண்பன் என்பதாலா..?

ஆம்..

நண்பன்..
நல்லவை எல்லாம் ஒன்றாய் ஆனவன்..
வாழ்வின் பொருளாணவன்..
இன்பத்தில் பங்கு கொண்டவன்..
துன்பத்தில் தோள் கொடுத்தவன்..
என் எல்லாமும் ஆனவன்..!

உன்னை பிரிவதென்பது
என் உயிர் பிரிவதைவிடவும்
கொடுமையானது..!

ஆனாலும் உயிர் வாழ்கிறேன்..
அதில் உன் உயிரும் கலந்திருக்கிறது..
அதனால்..!

உடல் மட்டுமே மண்ணைச் சேரும்
நம் உயிர் நட்பு என்னும் ஜோதியில்
சுடர் விட்டு வாழும்..!

வாழ்வோம் நண்பா..
இந்த பூமி சுற்றித் தீரும் வரை..!
சூரியன் மங்கி ஓயும் வரை..!
நட்பெண்ணும் இலக்கணம்
வரைந்துகொண்டே...!
                                                       ***Sunil sj***